• October 10, 2025
  • NewsEditor
  • 0

இந்தோனேசியாவில் கணவர் ஒருவர், தனது மனைவியை அவரது காதலனிடம் ஒரு மாடு சில பாத்திரங்கள் மற்றும் பணத்திற்கு ஒப்படைத்த வினோத சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தின் மானத்தை காக்கவே இந்த முடிவை எடுத்ததாக கணவர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பழங்குடியின பாரம்பரிய சடங்கான ”மோமோ சரபு” என்ற வழக்கத்தின் கீழ் இந்த பரிமாற்றம் நடந்துள்ளது.

இந்த தம்பதியருக்கு திருமணம் ஆன சில மாதங்களிலேயே மனைவி வேறு ஒருவருடன் பழகியது கணவருக்கு தெரியவந்துள்ளது. மனைவியின் காதலரே கணவனை அணுகி மனைவியை விட்டுக் கொடுக்குமாறு கேட்டு இருக்கிறார்.

இதை ஏற்றுக் கொண்ட கணவர் வன்முறையை தவிர்த்து அமைதியான முறையில் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண விரும்பியுள்ளார். இரு குடும்பங்களின் கௌரவத்தை காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, உள்ளூர் பழங்குடியின பாரம்பரிய படி, மனைவிக்கு பதில் மாடு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாரம்பரியத்தின் படி, திருமண உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை வன்முறை இன்றி தீர்க்கவே இது போன்ற சடங்கு பின்பற்றப்படுகிறது.

இதன்படி மனைவியைப் பெற்றுக் கொள்ளும் ஆண், அவருக்கு ஈடாக கால்நடைகள், வீட்டு உபயோக பொருட்கள் அல்லது பணத்தை வழங்க வேண்டும்.

அந்த பெண்ணை ஒப்படைப்பதற்கு காதலர் ஒரு பசுமாடு, ஒரு ஸ்டீல் கட்டில், இந்தோனேஷியன் ருபியா ஆகியவற்றை வழங்கி இருக்கிறார். இந்த சடங்கு தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி இணையவாசிகள் இடையே கவனம் பெற்று வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *