
சென்னை: தமிழக அரசு இன்னும் வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும் செய்வதை விடுத்து நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்கவும், கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் வரலாறு காணாத அளவில் இந்த முறை நெல் விளைச்சல் கிடைத்துள்ள நிலையில், தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையால், அதன் பயன்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போய்விடுமோ? என்ற ஐயமும், அச்சமும் எழுந்துள்ளது. நெல் கொள்முதல் விவகாரத்தில் விவசாயிகளின் நலன்களைக் காப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது.