• October 10, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் அருகே காட்டுப்பகுதியில் வைத்து 6 வயது சிறுவனின் கழுத்தை அறுத்து, அப்படியே விட்டு வந்த தாயின் இரண்டாவது கணவர் செல்வத்தை விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் ஏ.டி.பி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவருக்கு மருதுபாண்டி என்பவருடன் திருமணமாகி 6 வயதில் மகன் இருக்கிறார். கணவரைப் பிரிந்து தற்போது செல்வம் என்பவருடன் திருமணமாகி விருதுநகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. முதலாவது கணவருக்கு பிறந்த மகன் திருச்சுழி அருகே உள்ள இலுப்பையூரில் பெண்ணின் பெற்றோர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.

சிதம்பர பாண்டியன்

பள்ளி விடுமுறைக்காகவும், திருவிழாவிற்காகவும் விருதுநகர் வந்த மகனை நேற்று காலை 10 மணிக்கு தனது இரண்டாவது கணவர் வெளியில் அழைத்து சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் தாய் மாரீஸ்வரி, தனது மகனை காணவில்லை என பல இடங்களில் தேடிய போது இரண்டாவது கணவரும் உடனிருந்து தேடுவது போல நாடகமாடியுள்ளார்.

இதனிடையே, பந்தேனந்தல் அருகே சிறுவனை அழைத்துச் சென்ற செல்வம், சிறுவனை காட்டுப் பகுதியில் கழுத்தை அறுத்து, சத்தம் போட்டு விடக்கூடாது என்பதற்காக வாயில் பேனாவல் குத்தி அங்கேயே விட்டுவிட்டு வந்தது தெரிய வந்தது.

அப்போது சிறுவனின் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் சிறுவனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து தாய் மாரீஸ்வரி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் செல்வத்தை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *