
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றியச் செயலா வீராச்சாமி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அர.சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: சுழன்று, சுழன்று எல்லா பணிகளையும் செய்தாலும் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டது பெருமை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கருணாநிதியிடம் தேதி கேட்கச சென்றால், முதலில் தேதி கொடுப்பதற்கு பதில் திருமண தேதியை கேட்பார்.
மறுமுறையும் அவரிடம் கேட்க வேண்டும். யாராக இருந்தாலும் 2-வது முறை கேட்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே எளிமையான முதல்வர், மக்களோடு மக்களாக கலந்திருக்கும் துணை முதல்வரை நமமால் பார்க்க முடியாது. அதுதான் திமுக. சாமானியர்களை மதித்து சாமானியர் களுக்கு அரசியல் அரங்கத்தில் பதவிகள், பட்டங்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. அதை யாரும் மறுக்க முடியாது.