
புதுடெல்லி: இயக்குனர் ரிஷப் ஷெட்டியின் இயக்கிய காந்தாரா: சாப்டர் 1 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் ஒரே வாரத்தில் இதன் வசூல் ரூ.379 கோடியை எட்டியது. இந்தி படத்தின் வசூல் கடந்த புதன்கிழமை ரூ100 கோடியை கடந்தது. தெலுங்கு பதிப்பின் வசூல் இது வரை ரூ.60 கோடிக்கு மேல் உள்ளது. மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்ட படங்களும் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. வெளிநாடுகளில் இதன் ஒரு வார வசூல் 8 மில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதன் ஒரு வார வசூல் ரூ.470 (53 மில்லியன் டாலர்) கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.