
காந்தாரா படத்தின் மூலம் நாடுமுழுவதும் பேசுப்பொருளாக இருக்கும் நடிகை ருக்மினி வசந்த், ரசிகர்கள் தன்னை நேஷனல் க்ரஷ் என அழைப்பது குறித்து வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
28 வயதாகும் ருக்மினி, கடந்த 2023ம் ஆண்டு வெளியான சப்தா சாகரடாச்ச யல்லோ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது காந்தாரா சாப்டர் 1 படம் நாடு முழுவதும் வெற்றியடைந்து அவரைப் புதிய உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. தொடர்ந்து யஷ் நடிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் டாக்ஸிக் படத்திலும் தோன்றவிருக்கிறார்.
Rukmini Vasanth சொன்னதென்ன?
கரியரில் புதிய உயரத்தை எட்டியிருக்கும் ருக்மினி சமீபத்திய நேர்காணலில், “க்ரஷ் என அழைக்கப்படுவது முகத்தின் முன் புகழ்வதாக இருக்கும். நான் அதுபற்றி அதிகம் சிந்திப்பது இல்லை. இது தற்காலிகமான புகழ்ச்சி, கொஞ்ச காலத்தில் மாறக்கூடியது.
ஆனால் நான் ஒரு விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்றும் சிலர் என்னை பிரியா என அழைக்கின்றனர், சப்தா சாகரடாச்ச யல்லோவில் எனது பெயர் அது.
அந்த ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை விரும்புகின்றனர். ஆரம்பத்தில் என் கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எனக்கு பயம் இருந்தது. அவ்வளவு எளிதான யதார்த்தமான பாத்திரத்தை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” எனப் பேசியுள்ளார்.
முன்னதாக ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி, ரோஹித் சரஃப், முர்னால் தாக்கூர் மற்றும் சில நட்சத்திரங்கள் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்பட்டனர். சிலர் அதனை அன்பாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் ருக்மினியின் முதிர்ச்சியான பதில் ரசிகர்களுக்கு, குறிப்பாக சப்தா சாகரடாச்ச யல்லோ படத்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.