• October 9, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயகுமார் (56). இவரிடம் தாராபுரத்தை அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சிவசுப்பிரமணியம் என்பவர் தனக்குச் சொந்தமான வீட்டிற்கு நிரந்தர மின் இணைப்பு வழங்ககோரி, விண்ணப்பம் அளித்திருந்தார். இந்த விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்திய தாராபுரம் வடக்கு மின்வாரிய வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், நிரந்தர மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ. 3,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

கைது

லஞ்சம் தர விரும்பாத சிவசுப்பிரமணியம் இதுகுறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு நேரில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சிவசுப்பிரமணியனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். இதை சிவசுப்பிரமணியம் ஜெயக்குமாரிடம் நேரில் சென்று கொடுத்தபோது மறைந்திருந்த இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஜெயக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரது அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது கணக்கில் வராத ரூ.13,000 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதையும் போலீஸார் கைப்பற்றினர். இந்த சம்பவத்தால் தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *