
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.9) மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
இதற்கு முன் வெளியான இரண்டாவது புரொமோவில் பிக் பாஸ் கொடுத்த ‘தண்ணீர் கண்காணிப்பு’ டாஸ்கில் ஏதோ தவறு நடக்க, அதற்குக் காரணம் கம்ருதீன்தான் என்று எல்லோரும் அவரைக் குற்றம்சாட்டி இருந்தனர்.
இதற்கு முன் வெளியான இரண்டாவது புரொமோவில் பிக் பாஸ் கொடுத்த ‘தண்ணீர் கண்காணிப்பு’ டாஸ்கில் ஏதோ தவறு நடக்க, அதற்குக் காரணம் கம்ருதீன்தான் என்று எல்லோரும் அவரைக் குற்றம்சாட்டி இருந்தனர்.
‘கம்ருதீன் நீங்க தூங்கி இருக்கக்கூடாது’, ‘நமக்கு ஒரு பதவி வருதுனா அதை உணர்ந்து பொறுப்பா நடந்துக்கணும்’, ‘இது ஒரு மெயின் டாஸ்க் அதுல நீங்க கோட்டை விட்டுருக்கக்கூடாது’, ‘நீங்க அதுல கான்சென்ட்ரேட்டா நடந்திருக்கணும்’, ‘நீங்க பண்ணது தப்புதான்’ என ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் கம்ருதீனை ரவுண்டு கட்டினர்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் கம்ருதீன், ஆதிரை சௌந்தரராஜன் இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.
“நானும் வேலை பண்ணிருக்கேன். அதனால நீங்க வேலையே பண்ணலனு சொல்ல முடியாது. நாங்க பாத்துக்குறோம். நீ எதுவும் சொல்லாத” என்று கம்ருதீன், ஆதிரை சௌந்தரராஜனிடம் கோபமாகப் பேசுகிறார்.

அதற்கு ஆதிரை சௌந்தரராஜன், “நான் பார்த்தவரைக்கும் நீங்க அங்க இல்ல. முந்தின நாள் நான் விடிய விடிய டாஸ்கிற்காக உட்கார்ந்திருந்தேன். நீங்க அப்படி பண்ணீங்களா?” என்று கம்ருதீனைக் கேள்வி கேட்கிறார்.