
மும்பை: இந்தியா – இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மை உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளின் உயர் மட்டக் குழுவினரின் சந்திப்பு நடைபெற்றது. இதில், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது இந்தியா – இங்கிலாந்து இடையே கையெழுத்தான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) அடிப்படையில், வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.