
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (அக்.9)செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அப்போது பேசிய அவர், “பாஜக அரசுக்கு ஏற்கனவே இபிஎஸ் என்ற அடிமை கிடைத்துவிட்டார்.
மேலும் பாஜக புதிய அடிமைகளையும் தேடி வருகின்றனர். புதிய அடிமைகள் கூட கிடைக்கலாம்.
ஆனால் எத்தனை அடிமைகள் கிடைத்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது” என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “‘கை’ நம்மை விட்டு எங்கும் போகாது” என்று காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து மறைமுகமாகக் கூறியிருக்கிறார்.
ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு வரும் நிலையில் உதயநிதி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.