
இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரைத்த 20 அம்சங்களை கடந்த வாரம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முழுவதும் ஒப்புக்கொண்டார். ஹமாஸ் அந்த அம்சங்களில் உள்ள சிலவற்றை ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரு தரப்புக்கும் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அது வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அடுத்து என்ன நடக்கும்?
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ட்ரம்ப், ‘நமது அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை இஸ்ரேல், ஹமாஸ் என இருதரப்பினரும் ஒப்புகொண்டு கையெழுத்திட்டுள்ளதை நான் பெருமையுடன் அறிவிக்கிறேன்.
இது அனைத்து பணயக் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்பதையும், வலுவான மற்றும் நிலையான அமைதிக்கு முதல் அடியாக இஸ்ரேல் தனது படையைத் திரும்ப பெறும் என்பதையும் குறிக்கிறது.
அனைத்து தரப்பினரும் சமமாக நடத்தப்பட்டார்கள். இது அரபு நாடுகள், முஸ்லீம் நாடுகள், இஸ்ரேல், அதை சுற்றியுள்ள நாடுகள், அமெரிக்காவிற்கு சிறந்த தினம்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கு மத்தியஸ்தம் செய்ய வந்த கத்தார், எகிப்து மற்றும் துருக்கியைச் சேர்ந்த நபர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.