• October 9, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக தவெக நிர்​வாகிக்கு ஜாமீன் வழங்க நீதி​மன்​றம் மறுத்துவிட்டது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் விஜய் பங்​கேற்க தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், நிர்​வாகி பவுன்​ராஜ் ஆகியோரை கடந்த செப். 29-ம் தேதி கரூர் போலீ​ஸார் கைது செய்​து, சிறை​யில் அடைத்​தனர். மேலும், பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செய​லா​ளர் நிர்​மல்​ கு​மார் ஆகியோரைப் பிடிக்க தனிப்​படை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், நிர்​வாகி பவுன்​ராஜ் ஜாமீன் கேட்டு கரூர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. மனுவை விசா​ரித்த மாவட்ட அமர்வு நீதிபதி இளவழகன், “வழக்கு விசா​ரணை ஆரம்ப நிலை​யில் உள்​ள​தால், ஜாமீன் மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *