
பெங்களூரு: கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுவதற்காக பள்ளிகளுக்கு அக்டோபர் 18ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் கூறியதாவது: கர்நாடகாவில் சமூக,கல்வி,பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் கடந்த செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 7ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கணக்கெடுப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.