
புதுடெல்லி: நாட்டில் முதல் முறையாக அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ரூ.6,000 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் நுமலிகர் என்ற இடத்திலிருந்து கோஹ்பூர் வரை, பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதை அமைப்பதற்கான திட்டம் ரூ.6,000 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டுள்ளது. இது ஆற்றுக்கு கீழே அமைக்கப்படும் நாட்டின் முதல் சுரங்கப்பாதை திட்டமாகும். சீன எல்லை அருகே அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டி அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை 33.7 கி.மீ நீளத்துக்கும், பிரம்மபுத்திர நதியின் கீழ் 32 மீட்டர் ஆழத்திலும் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் நிறைவு பெற 5 ஆண்டு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.