• October 8, 2025
  • NewsEditor
  • 0

பாஜக-வைச் சேர்ந்த உள்துறை அமித் ஷா ‘ZOHO’ நிறுவனத்தின் ‘zoho mail’க்கு மாறியுள்ளதாகக் கூறியிருக்கிறார். இதன் பின்னணி என்ன? அதில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம்.

பின்னணி

ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் சமீபத்திய நிலைப்பாடுகள், செயல்பாடுகள் இந்தியாவிற்கு எதிராக மாறிவருகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு, முக்கிய பொறுப்புகள் வழங்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இதில் நகைச்சுவை என்னவென்றால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் இந்தியர்களே. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னணி நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளில் 70% இந்தியர்கள்தான்.

Made in India

இப்படியாக தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சார்ந்த துறைகளில் இந்தியர்கள், தமிழர்கள் கோலோச்சி வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்பப் பொருள்கள், மென்பொருள்கள் எல்லாம் அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாட்டு தயாரிப்புகளே.

நம் நாட்டிற்குத் தேவையான தொழில்நுட்பப் பொருள்கள், மென் பொருள்கள் அனைத்தையும் நாமே தயாரிக்கும் அளவிற்கு தன்னிறைவைப் பெற்று ‘Made in India’ வை நோக்கி முன்னேற வேண்டும் என்பதே இந்தியாவின் அடுத்தக்கட்ட பாய்ச்சலாக இருந்து வருகிறது. அதற்கு அடித்தளமிட்டு வருகிறது சென்னையைச் சேர்ந்த ZOHO நிறுவனம்.

‘ZOHO’ நிறுவனம், WhatsApp-க்கு மாற்றாக ‘அரட்டை (Arattai)’ செயலியை அறிமுகப்படுத்தி, அது சமீபத்தில் இந்திய ஆப் ஸ்டோரில் முதலிடத்தைப் பிடித்தது. இந்தியர்கள் பலரும் இந்த அரட்டை செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்திய ஆப் ஸ்டோரில் அது முதலிடத்தையும் பிடித்திருந்தது.

இதையடுத்து தற்போது ‘zohomail.in’ பிரபலமாகி வருகிறது. இந்திய தொழில்நுட்பமான, இன்னும் சொல்லப்போனால் நம் சென்னையின் தொழில்நுட்பமான இதைப் பலரும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் பாஜக-வைச் சேர்ந்த உள்துறை அமைச்சர், ‘zoho mail’க்கு மாறியது குறித்து “நான் ‘zoho mail’க்கு மாறிவிட்டேன். எனது புதிய மின்னஞ்சல் முகவரி ‘amitshah.bjp @ http://zohomail.in’. என்னை மிஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள இனி இதைப் பயன்படுத்துங்கள்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து இந்த ‘zoho mail’ நாடுமுழுவதும் கவனம்பெற்றிருக்கிறது. பலரும் இதைப் பயன்படுத்த முன்வந்துகொண்டிருக்கின்றனர்.

1990ஆம் ஆண்டே இந்த ‘zoho mail’ அறிமுகமாகிவிட்டது. சென்னையில் ஒரு சின்ன அப்பார்ட்மெண்டில்தான் இது உருவாக்கப்பட்டது. ‘zoho’வின் ஸ்ரீதர் வேம்பு இந்த கனவின் விதையை விருட்சமாக மாற்றினார்.

Gmail-ல் இருப்பதைப் போலவே ‘Calendar, Contacts, ToDo, Notes, Bookmarks’ என எல்லா வசதிகளும் இந்த Zoho மெயிலில் இருக்கிறது. குறிப்பாக ‘Business, Admin Control’ உள்ளிவற்றில் மெயில்களை மேனேஜ் செய்வதற்கு ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

Email, Gmail போன்றவற்றில் இருக்கும் மெயில்களை எளிதில் ‘zoho mail’க்கு மாற்றிவிடலாம். மெயில்களை தேடி எடுப்பது, தனித்தனியாக பிரித்து வைத்துக்கொள்வது என எதையும் எளிதில் வகைப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.

விளம்பரங்கள் ஏதும் இருக்காது என்று உத்தரவாதம் கொடுக்கிறார்கள். மேலும், தகவல் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இருக்காது என்று உறுதியாகக் கூறிகின்றனர்.

எல்லாவற்றிருக்கும் மேலாக, இது இந்தியாவின் தயாரிப்பு, குறிப்பாக சென்னையின் தயாரிப்பு என்பதே இதன் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் தன்னிறைவுப் பெற்ற இந்தியாவை நோக்கிச் செல்ல இதுபோன்ற ‘Made India’ தொழில்நுட்பத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று இதற்கு ஆதரவு தந்து ‘zoho mail’க்கு மாறி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *