• October 8, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி: இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமையை சட்டப்படி ரத்து செய்து, நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 60-வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்தியப் பிரதேச மாநிலம், சிந்து வாரா மாவட்டத்தில் குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாகக் கருதப்படும் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து குறித்து, மத்திய அரசிடமிருந்து கடந்த அக்.1-ம் தேதி எங்களுக்கு அவசர கடிதம் கிடைத்தது. கடிதம் கிடைத்ததும் அந்த மருந்தின் விற்பனைக்கு தடை விதித்தோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *