
புதுடெல்லி: மின்னஞ்சல் வழியாக கடித போக்குவரத்துகளை மேற்கொள்ள உள்நாட்டு நிறுவன தயாரிப்பான சோஹோ மெயிலுக்கு தான் மாறிவிட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் சோஹோ மெயிலுக்கு மாறிவிட்டேன். எனது மின்னஞ்சல் முகவரியை குறித்துக்கொள்ளுங்கள். எனது புதிய மின்னஞ்சல் முகவரி amitshah.bjp@zohomail.in. எதிர்காலத்தில் மின்னஞ்சல் வழியாக கடிதப் பரிமாற்றம் செய்ய இந்த முகவரியைப் பயன்படுத்தவும். இந்த விஷயம் குறித்து கவனித்ததற்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.