• October 8, 2025
  • NewsEditor
  • 0

பிக் பாஸ் சீசன் 9 கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூடியூபர்கள் என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

Bigg Boss Tamil 9

இந்நிலையில் இன்று (அக்.8) வெளியான முதல் புரொமோவில் விஜே பார்வதிக்கும், வியானாவிற்கும் வாக்குவாதம் நடந்திருந்தது.

“நாங்கதான் உங்களை வேலை வாங்குவோம். நீங்க எங்களை வேலை வாங்கக்கூடாது” என்று வியானா சொல்ல, “நீங்க சொல்றபடி எல்லாம் எங்களால வேலை பார்க்க முடியாது. எங்களுக்குனு ஒரு சுயமரியாதை இருக்கு. வியானா வேலை வாங்குற விதம் எங்களுக்குப் பிடிக்கல” என்று பார்வதி காட்டமாகப் பேசியிருந்தார்.

ரம்யா ஜோ, சுபிக்ஷா உள்ளிட்ட பெண் ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் பார்வதிக்கு எதிராகப் பேசி இருந்தனர்.

தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில், “நான் உன் கிட்ட என்ன சொன்னேனு சொல்லு. உன் மேலயும், வியானா மேலயும் எனக்கு ஒரு முரண்பாடு இருக்கு.

 Bigg Boss Tamil 9
Bigg Boss Tamil 9

நான் க்ளீன் பண்ண வரல. இந்த கோல்ட் வார் எல்லாத்தையும் மறப்போம் மன்னிப்போம்” என்று பார்வதி, சுபிக்ஷாவிடம் பேசுகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *