
பிக் பாஸ் சீசன் 9 கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.
கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.
சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான (அக்.8) முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் பார்வதிக்கும், வியானாவிற்கும் வாக்குவாதம் நடக்கிறது.
“நாங்கதான் உங்களை வேலை வாங்குவோம். நீங்க எங்களை வேலை வாங்கக்கூடாது” என்று வியானா சொல்ல, “நீங்க சொல்றபடி எல்லாம் எங்களால வேலை பார்க்க முடியாது. எங்களுக்குனு ஒரு சுயமரியாதை இருக்கு. வியானா வேலை வாங்குற விதம் எங்களுக்கு பிடிக்கல” என்று பார்வதி காட்டமாகப் பேசுகிறார்.
ரம்யா ஜோ உள்ளிட்ட பெண் ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் பார்வதிக்கு எதிராகப் பேசுகிறார்கள்.