
சென்னை: வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்து வரும் பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்துக்கு சென்னை, சேலம், ஐதராபாத், பெங்களூரு, மும்பை உள்பட 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 700-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன. இங்கு விற்பனையாகும் ஆடைகளுக்கு முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன.