
பாஜகவைச் சேர்ந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா, “பிராமணர்கள்தான் நமது சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள்… பிராமண சமூகம் சமூக நலனுக்காகப் பாடுபட்டுள்ளது. எனவே, எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமூகத்துக்காகப் பாடுபட வேண்டும்” எனப் பேசியிருந்ததற்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்வினைகள் தோன்றின.
அந்தவகையில் திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, “சாதி அமைப்பைப் போற்றுவதும், ஒரு குறிப்பிட்ட சாதியின் செயற்கையாக உருவாக்கப்பட்ட ‘பெருமையை’ உயர்த்துவதும் இந்த நாட்டின் சாபக்கேடு.
சாதியின் பெயரால் பலர் கொல்லப்பட்ட பிறகும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியும், முதலமைச்சரும் அதைப் புகழ்ந்து பேசுவது அருவருப்பானது, வெட்கக்கேடானது மற்றும் தேச விரோதமானது.

பெரியார் தனது வாழ்நாளில் அழிக்கப் போராடிய அதே அடக்குமுறை கட்டமைப்பைத்தான் பாஜக வேண்டுமென்றே ஆழப்படுத்தி வருகிறது.
சமீபத்தில், தமிழக ஆளுநர் கூட தமிழ்நாடு ஏன் போராடுகிறது என்று கேட்டார். அவர் நாம் ஒருபோதும் போராடுவதை நிறுத்தப் போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.