• October 8, 2025
  • NewsEditor
  • 0

கோவை: கோவை அவிநாசி சாலை​யில் கட்​டப்​பட்​டுள்ள, தென்​னிந்​தி​யா​விலேயே நீள​மான உயர்​மட்ட பாலத்​துக்கு ஜி.டி.​நா​யுடு பெயரைச் சூட்​டிய முதல்​வர் ஸ்டா​லின், மக்​கள் பயன்​பாட்​டுக்கு நாளை (அக். 9) திறந்து வைக்​கிறார். கோவை அவி​நாசி சாலை​யில் போக்​கு​வரத்து நெரிசலை தவிர்க்க ரூ.1,791.23 கோடி​யில் உப்​பிலி​பாளை​யம் முதல் கோல்​டு​வின்ஸ் வரை 10.10 கிலோமீட்​டர் தொலை​வுக்கு உயர்​மட்​டப் பாலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

பாலத்​தின் சிறப்​பு​கள் குறித்து மாநில நெடுஞ்​சாலைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்​தப் பாலத்​தின் ஓடுதள அகலம் 17.25 மீட்​ட​ராகும். இதில் 304 தூண்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. நான்கு வழித்தட உயர்​மட்​டப் பாலம், 6 வழித்​தடத்​துடன் விரிவுபடுத்​தப்​பட்ட சாலை என மொத்​தம் 10 வழித்​தடங்​களு​டன், தென்​னிந்​தி​யா​விலேயே மிக நீள​மான உயர்​மட்ட பால​மாக இது அமைக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *