
புதுடெல்லி: சாட்சிகளை கலைக்க முற்பட்டால் எந்த நேரமும் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எங்களால் ரத்து செய்ய முடியும். அவர் அமைச்சராக விரும்பினால் நீதிமன்றத்தில் தனியாக மனுதாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணம் வசூலி்த்து மோ்சடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 2022 செப்டம்பரில் அளித்த தீர்ப்பில், ‘செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாதது குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவி்த்திருந் தது. மேலும், அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக பதவியில் இல்லை என்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.