
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மேலிட தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா உள்ளிட்ட தலைவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.