• October 7, 2025
  • NewsEditor
  • 0

போத்தீஸ் குழுமத்தின், அங்கமான போத்தீஸ் ஸ்வர்ண மஹால் தனது 7வது கிளையை, சென்னை பூந்தமல்லியில் Oct 5ம் தேதி துவங்கி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் நகை கலெக்க்ஷன்ஸ் தென்னிந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் கலை நயத்தை பிரதிபலிக்கின்றது. கைவினை திறனுடன் நவீனத்தையும் விரும்பும் நகை ஆர்வலர்களுக்கு போத்தீஸ் ஸ்வர்ண மஹால் தனது பிரத்யேக கலெக்க்ஷன்ஸ்களை வழங்குகிறது.

போத்தீஸ் ஸ்வர்ண மஹால் 2021-ம் ஆண்டில் பிரீமியம் நகைகள் அனுபவத்தை வழங்குவதற்காக துவங்கப்பட்டது.

போத்தீஸ் ஸ்வர்ண மஹால் திறப்பு விழா

தனது முதல் கிளையை திருநெல்வேலியில் துவங்கி, தொடர்ந்து சென்னை குரோம்பேட்டை, திருவனந்தபுரம், திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் ஷோரூம்கள் விரிவடைந்துள்ளன. ஒவ்வொரு ஷோரூமும் 18,000–24,000 சதுர அடிகளில் பரந்து விரிந்து, ஒவ்வொரு சுப நிகழ்விற்கும், நகைகளைப் பிரத்தியேகமாக வழங்குகிறது; இதில் தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் அடங்கும்.

போத்தீஸ் ஸ்வர்ண மஹால், நகைத் துறையில் வலுவான பெயரைப் பெற்றுள்ளது. 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் சிறந்த திருமண நகைக்கான National Jewellery Award விருதை பெற்றுள்ளது. இந்த வடிவமைப்புகள் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன.

2025-ல், The Economic Times மூலம் “Iconic retail brand of the year “என அறிவிக்கப்பட்டது. மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீனிவாச திரு கல்யாணம் போன்ற முக்கிய கலெக்ஷன்கள் தனது கதை கூறும் கலைநிறைவை கொண்டு வாடிக்கையாளர்களின் மனதை மகிழ்வித்துள்ளன. மேலும் 5 for 5 மற்றும் 5 in 1 தீபாவளி போன்ற புதுமையான பண்டிகை கலெக்ஷன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

தனது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் உறுதியின் வெளிப்பாடாக, போத்தீஸ் ஸ்வர்ண மஹால் Great Place to Work®️ சான்றிதழ் பெற்றுள்ளது. இது ஒரு நேர்மறை, மற்றும் ஊளியர்களுக்கான பணியிடக் கலாச்சாரத்தில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

போத்தீஸ் ஸ்வர்ண மஹால் திறப்பு விழா
போத்தீஸ் ஸ்வர்ண மஹால் திறப்பு விழா

போத்தீஸ் ஸ்வர்ண மஹால், புதுமையான பிரீமியம் நகைகளை வழங்குவதில் தனித்துவமாக செயல்படுகிறது. Digigold என்ற டிஜிட்டல் தளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கத்தில் எளிதாக முதலீடு செய்யவும், அதை ஆன்லைனிலும் ஷோரூமிலும் எளிதில் தங்க நகைகளாக வாங்க வழி வகுக்கிறது.

புதியதாக துவங்க இருக்கும் பூந்தாமல்லி ஷோரூம், வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பரமான, நுட்பமான அனுபவத்தை வழங்கும், மேலும் திறப்பு விழா சலுகையாக தங்கம் சவரனுக்கு ரூபாய் 2000/- சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.

போத்தீஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு ரமேஷ் அவர்கள் கூறுகையில், குறுகிய காலத்தில், விரைவான வளர்ச்சியுடன் போத்தீஸ் வர்ண மஹால், தனது ஏழாவது கிளையை பூந்தமல்லியில் துவங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நவீன கலை திறனுடன் பிரீமியம் நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, சேவை அளிப்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதரவை போத்தீஸ் ஸ்வர்ண மஹாலுக்கு வழங்குமாறு மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *