
பிக் பாஸ் சீசன் 9 நேற்று முன்தினம் (அக்.5) கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.
கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.
சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான (அக்.7) மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிரவீன் தேவசகாயத்துக்கும், வியானாவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது.
‘உங்கள மதிச்சு நான் பேசுறேன். ஆனா நீங்க மதிக்கலனாலும் பரவால. என் முகத்தைப் பார்த்துப் பேசலாம்’ என வியானா, தேவசகாயத்திடம் கோபமாகப் பேச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. புரொமோவை முழுமையாகப் பார்க்கக் கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.