
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நேற்று முன்தினம் (அக்.5) கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.
கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.
சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
நேற்றைய தினம் கெமி, கம்ருதீன், திவாகர், பிரவீன் தேவசகாயம் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று (அக்.7) வெளியாகி இருந்த முதல் புரொமோவில் திவாகருக்கும், ரம்யா ஜோவுக்கும் சண்டை நடந்தது.
‘கெமி இவர் விஷயத்தில் எதுவும் சொல்லக்கூடாது, பிரவீன் அண்ணாவும் எதுவும் சொல்லக்கூடாது.
ஆனால் இவர் மட்டும் எல்லா விஷயத்திலும் மூக்கைவிட்டு, இது தப்புனு சொல்வாரு’ என ரம்யா ஜோ பேசிக்கொண்டிருக்கும் போது, அருகில் இருந்த திவாகர், ‘ஏய் சொல்றதைக் கேளுமா’ எனக் கத்தினார்.
இதனால் கோபப்பட்ட ரம்யா ஜோ, ‘கத்துற வேலையெல்லாம் இங்க வச்சுக்கக் கூடாது’ என எகிறினார்.

இதற்கு திவாகர், ‘ஏய் மரியாதையா பேசுமா படிச்சிருக்கியா, படிக்கலையா நீ… நாகரீகம் தெரியுமா உனக்கு’ எனக் கேட்க படிப்பைப் பற்றி பேசியதால் சக போட்டியாளர்களும் ரம்யா ஜோவுக்கு சப்போர்ட் செய்து, ‘படிப்பு பத்தி கேக்குறீங்கள்ல நான் என்ன படிச்சிருக்கேன் தெரியுமா’ என கம்ருதீன், FJ ஆகியோர் திவாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில், ‘என்னைய ஏன் அந்தப் பொண்ணு கிட்ட மன்னிப்பு கேட்க சொல்றீங்க. அந்தப் பொண்ணும் தானே சண்ட போட்டுச்சு, அவுங்கள ஏன் மன்னிப்பு கேட்க சொல்ல மாட்டிகுறீங்க. எல்லாரும் டபுள் கேம் ஆடுறிங்க’ என்று திவாகர் ஹவுஸ்மேட்ஸிடம் சண்டை போடுகிறார்.

பிறகு FJ-க்கும் திவாகருக்கும் வாக்குவாதம் நடக்க FJ, திவாகரை அடிக்க கையை ஓங்குகிறார். கம்ருத்தினும் திவாகருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.