
புதுடெல்லி: உ.பி.யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்மிக மடம் தொடங்கியவர் பெண் சாமியார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்கள் உள்ளனர். நிரஞ்சன் அகாடாவில் மகா மண்டலேஷ்வர் பட்டம் பெற்ற இவர், அகில இந்திய இந்து மகா சபையின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
பூஜா, கடந்த 2019 ஜனவரியில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவரது உருவப் பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, அதற்கு தீவைத்து எரித்தவர். இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் பூஜா மடத்தின் நிர்வாகியும் தொழிலதிபருமான அபிஷேக் குப்தாவும் (32) கைதானார். பிறகு அபிஷேக் – பூஜா இடையே விரோதம் ஏற்பட்டது.