
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு, ஆணையர் கஜலக்‌ஷ்மி, போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள், காவல்துறை, சிஎம்டிஏ, நெடுஞ்சாலை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.