• October 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பாமக நிறு​வனர் ராம​தாஸ் இதய பரிசோதனைக்​காக சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் கடந்த 5-ம் தேதி அனு​ம​திக்​கப்​பட்​டார். இதுபற்றி தகவல் அறிந்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மருத்​து​வ​மனைக்​குச் சென்​று, அவரை சந்​தித்து நலம் விசா​ரித்​தார்.

இதே​போல் காய்ச்​சல், சளி, இரு​மல் பிரச்​சினைக்​காக இதே மருத்​து​வ​மனையில் சிகிச்சை பெற்​று​வரும் மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ​வின் குடும்​பத்​தினரை​யும் சந்​தித்து ஸ்டா​லின் நலம் விசா​ரித்​தார். அப்​போது அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, எ.வ.வேலு உடன் இருந்​தனர். முன்​ன​தாக, காலை​யில் மருத்​து​வ​மனைக்கு வந்த ராம​தாஸ் மகனும், பாமக தலை​வரு​மான அன்​புமணி, மருத்​துவர்​களை சந்​தித்து உடல்​நிலை குறித்​தும், அளிக்​கப்​படும் சிகிச்​சைகள் பற்​றி​யும் கேட்​டறிந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *