
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6. 11-ம் தேதிகளில் இருகட்டங்களாகநடத்தப்படும். நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறை வடைகிறது. இந்த நிலையில், மாநில சட் டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை டெல்லியில் தலைமைத் தேர் தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று வெளியிட்டார். அப்போது, செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: நேர்மை, நம்பகத்தன்மையுடன் வாக் காளர் பட்டியல் தயாரிப்பது. சுதந்திர மாக, நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவது ஆகிய இரு பிரதான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள் கிறது. பிஹாரில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜூன் 24ம் தேதி திருத்தப் பணியை தொடங்கி, ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவு பட்டியலை வெளியிட்டோம். அனைத்து கட்சிகளுக் கும் இந்த பட்டியல் வழங்கப்பட்டது.