
சென்னை: “உச்ச நீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக நடந்த செயல், நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித் துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உச்ச நீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக நடந்த செயல், நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும். இது வெட்கக்கேடானது, கடும் கண்டனத்துக்கு உரியது. இந்தச் சம்பவத்துக்கு கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் தலைமை நீதிபதி பதிலளித்த விதம், அந்த நிறுவனத்தின் வலிமையைக் காட்டுகிறது.