
வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வட சென்னையைக் களமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருக்கிறது. சிலம்பரசனை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.
கடந்த செப்டம்பர் 4ம் தேதி வெற்றிமாறன் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் தாணு, தனது எக்ஸ் வலைத்தளத்தில், “வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள்” என வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘STR 49’ படத்தின் அப்டேட்டை வீடியோவோடு வெளியிட்டிருந்தார்.
விகடன், ‘டிஜிட்டல் விருது விழா’ மேடையிலும் ‘Most Celebrated Hero in Digital’ விருதைப் பெற்ற சிம்பு வீடியோ மூலம் பேசுகையில், “STR 49 அப்டேட் வெற்றிமாறன் சார்கிட்ட கேளுங்க, ப்ரோமோ வீடியோவெல்லாம் ரெடியா இருக்கு, எப்போ வெளியிடுவார்னு தெரியல” என்றார்.
இதையடுத்து தற்போது, கலைப்புலி எஸ்.தாணு, “சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க STR & வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
One Name… One Power… The title rises tomorrow@ 8.09AM#VetriMaaran @SilambarasanTR_ #STR49 #SilambarasanTR #VCreations47
— Kalaippuli S Thanu (@theVcreations) October 6, 2025
இப்போது, ‘One Name… One Power… The title rises tomorrow@ 8.09AM” என STR & வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘STR 49’ படத்தின் டைட்டில் நாளை காலை 8 மணிக்கு வெளியாகும் என்று ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இதோடு சேர்த்து ‘PROMO’ வீடியோ ஒன்றும் வெளியாகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…