• October 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6 அன்றும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11 அன்றும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ளது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்காக அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் விவேக் ஜோஷி, சுக்​பீர் சிங் சாந்து வெளியிட்டு வருகின்றனர். அதன்படி பிஹார் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 6-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 11-ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.18-ஆம் தேதியும், 2-ஆம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்.21-ஆம் தேதியும் தொடங்குகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *