
சென்னை: போக்குவரத்து துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக வளர்ச்சி நிதி நிறுவன மேலாண் இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்கும் வகையில் ரூ.152.28 கோடியை கடனாக வழங்குமாறு போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் கோரியுள்ளது.
அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை போக்குவரத்துக் கழகங்களுக்கு தலா ரூ.11.94 கோடி, ரூ.7.35 கோடி, ரூ.22 கோடி, ரூ.12.08 கோடி, ரூ.28.30 கோடி, ரூ.33.91 கோடி, ரூ.23.08 கோடி, ரூ.13.62 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.