• October 6, 2025
  • NewsEditor
  • 0

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று (அக்.5) தொடங்கியிருக்கிறது.

கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

Bigg Boss Season 9 Contestants

சுழல் (சீசன் 1) வெப் சீரிஸ், அரண்மனை 4 உள்ளிட்ட சில திரைப்படங்களில், நடித்த FJ-வும் கலந்து கொண்டிருக்கிறார்.

சிறப்பாக பீட் பாக்ஸ் செய்யும் FJ குறித்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ஒரு சிறுவனாக கையில் மைக் வைத்திருந்த காலத்தில் இருந்தே எனக்கு FJ-வை தெரியும்.

அவனுடைய மிகப்பெரிய கனவு பீட்‌பாக்சிங்தான். அவன் அண்டர்கிரவுண்ட் ட்ரைப்பில் பீட்‌ பாக்சிங் பண்ணுவான். சில சமயம் ரேப் பாடுவான்.

அவனைப் பார்த்தவுடனேயே எனக்கு இந்தப் பையன் ஒரு உண்மையான போராளி எனத் தோன்றியது.

ஒரு நாள் பெரிய மேடைகளில் கலக்குவான் என்று நம்பிக்கை இருந்தது.

ஒரு நாள் திடீரென்று வெப் சீரிஸ் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் அவன் நடித்திருந்தான்.

 FJ
FJ

நான் உடனே அவனை அழைத்து, ‘தம்பி இது எப்போடா?’ என்று கேட்டேன். அதற்கு அவன், “அண்ணா, நான் நடிகனாகணும்’ன்னு சொன்னான். மீண்டும் அவன் போராட்டம் தொடர்ந்தது. அதுதான் FJ.

எப்போதும் வாழ்க்கையில் ஒரு படி மேலே போக முயற்சிக்கும் உண்மையான போராளி. இப்போது அவன் பிக் பாஸிற்குள் கால் வைக்கிறான். உண்மையாக இரு தம்பி.

நான் உன்னிடம் பார்த்த திறமையை இந்த உலகமும் பார்க்கட்டும். வாழ்த்துக்கள், நிகழ்ச்சியை வென்று வா” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *