• October 6, 2025
  • NewsEditor
  • 0

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த ‘காந்தாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது அதன் ப்ரீக்வலாக ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியானது.

ருக்மினி வசந்த், குல்ஷன் தேவயா, ஜெயராம் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Kantara Chapter 1

`காந்தாரா சாப்டர் 1′ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்தப் படத்தில் அழகாக தோற்றமளித்த ருக்மினியின் ‘கனகவதி’ கதாபாத்திரத்திற்கு ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி ஷெட்டிதான் மேக்கப் மற்றும் ஆடை வடிவமைப்புகளை செய்துகொடுத்திருக்கிறார்.

அதே ‘கனகவதி’ கெட்டப்பில்தான் அவர் புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் அவருக்கு மேக்கப் மற்றும் ஆடை வடிவமைப்பை செய்துகொடுத்த ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி ஷெட்டிக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

ருக்மினி வசந்த்
ருக்மினி வசந்த்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” பிரகதி ஷெட்டிக்கு என்னுடைய அன்பையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்.

புரொமோஷன் முழுவதும் எனது ஒவ்வொரு லுக்கையும் அழகாக வடிவமைத்து அதிலும் கனகவதியின் லுக்கை கொண்டுவந்து கொடுத்ததற்கு நன்றி.

இந்த ‘காந்தாரா’ பயணத்தில் எனக்கு நம்பிக்கையுடைய தோழியாக இருந்ததற்கு மிக்க நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *