• October 6, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த வாரமும் தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கைப்படி, இந்த வாரம் எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

“இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழை

நாளை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் புதன்கிழமை (08-10-2025) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை. செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் வியாழக்கிழமை (09-10-2025) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை (10-10-2025, 11-10-2025) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு” என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *