
புதுக்கோட்டை: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், வரும் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியை சந்திக்க நேரிடும் என்று தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில இணை செயலாளர் ஜபருல்லா கூறினார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஜபருல்லா பேசியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடையும் எதிர்க்கட்சி கூட்டணிதான் ஆட்சியமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.