
சென்னை: அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்கவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் 119 பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை கடந்த மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் மேற்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களின் தகுதிக்கு ஏற்ற பதவிகள் என்ன என்ற விவரங்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 119 பணிகளை நிபுணர் குழு மூலம் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் 4 நிலைகளுக்கு ஏற்ப ஏ, பி, சி, டி என்ற பிரிவில், 119 பதவிகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.