
சென்னை: ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்த நடிகர் அஜித்குமார் அணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் கார் பந்தயத்தில் அஜித் அணி ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதையொட்டி, அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: பார்சிலோனாவில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இந்த வெற்றியின் மூலம் உலக அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும், தமிழகத்தையும் பெருமையடைய செய்த நடிகர் அஜித்குமாருக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள்.