• October 5, 2025
  • NewsEditor
  • 0

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக இன்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

வருடந்தோறும் பிக் பாஸ் வீட்டை மாற்றியமைப்பதுபோல, இந்த வருடத்தின் வீட்டையும் எகிப்திய அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக அமைத்திருக்கிறார்கள்.

பிக் பாஸ்

போட்டியாளர் ஒவ்வொருவராக வீட்டிற்குள் சென்று கொண்டிருக்கிறார்கள். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் என பலரும் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து வருகிறார்கள்.

வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர் யார்? அவர்களைப் பற்றிய விவரத்தை இங்கு பார்ப்போம்.

திவாகர்:

இணையத்தில் ரகளைக்கு ரொம்பவே பேர் போனவர் திவாகர். சோஷியல் மீடியா பக்கங்களில் நகைச்சுவையான ரீல்களைப் பதிவிடும் கன்டென்ட் கிரியேட்டரான இவர் பிசியோதெரபி டாக்டராகவும் இருக்கிறார். இவர் பதிவிடும் வீடியோக்களைப் போல இவருடைய நேர்காணலும் இணையத்தில் பெரும் வைரலாகும். பிக் பாஸ் சீசன் 9-ல் முதலாவது போட்டியாளராக இவர் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். ‘யூடியூபில் திவாகரிடம் நீங்கள் பார்த்த முகத்தைவிட இதில் இவருடைய வேறொரு முகத்தைக் காட்டப்போகிறோம்’ எனவும் சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி.

திவாகர்
திவாகர்

அரோரா சின்க்ளர்:

சமூக வலைதளப் பிரபலமான அரோரா கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசனில் பங்கேற்றிருந்த ரியாவின் க்ளோஸ் பிரண்ட். மாடலிங் செய்யும் இவர் சில வெப் சீரிஸ்களிலும், மியூசிக் வீடியோக்களிலும் நடித்திருக்கிறார். இரண்டாவது போட்டியாளராக இவர் இந்த பிக் பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.

FJ:

சூழல் (சீசன் 1) வெப் சீரிஸ், அரண்மனை 4 உள்ளிட்ட சில திரைப்படங்களில், வெப் சீரிஸ்களில் நடித்தவர் FJ. பீட் பாக்ஸ் செய்வது இவருடைய பலம். துள்ளலான பீட் பாக்ஸிங் செய்து கொண்டே மூன்றாவது போட்டியாளராக இந்த சீசனில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் FJ.

விஜே பார்வதி:

ஜர்னலிசம் படித்து மீடியா துறைக்குள் வந்தவர் விஜே பார்வதி. பின்னர், யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராக களமிறங்கி மக்களுக்கு பரிச்சயமானார். பயணத்தை பெரியளவில் விரும்பும் இவர் ‘வைப் வித் பாரு’ என்ற அவருடைய யூடியூப் சேனலிலும் தொடர்ந்து வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றிருக்கிறார். அதுபோல, குக் வித் கோமாளி இரண்டாவது சீசனிலும் இவர் பங்கேற்றிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *