• October 5, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் திரை நட்சத்திரம் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திரைப்பட பணிகளில் இருந்து சற்று ஓய்வெடுத்திருக்கும் ரஜினிகாந்த், நெருங்கிய நண்பர்களுடன் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு தோளில் துண்டுடன் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு சாலையோரத்தில் நின்று சாப்பிடும் புகைப்படம் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

Rajinikanth in Rishikesh

ரிஷிகேஷில் சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் உள்ள நபர்களுடன் உரையாடுவதையும் மற்றொரு படத்தில் பார்க்க முடிகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியானது. தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்துக்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. கேரளாவில் படபிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் திரைப்படம் உருவாக இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. ராஜ்கமல் – ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அந்த படத்துக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *