
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது.
கருப்பு உடையில் என்ட்ரி கொடுத்து பேச ஆரம்பித்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, “ஒரு வருஷத்துக்கு அப்புறம் திரும்பவும் உங்கள பார்க்கிறது மகிழ்ச்சி. இந்த பிக் பாஸ் 9 சீசன் பிரமாண்டமாக இருக்கு, ஆட்டமும் பிரமாண்டமாக இருக்கும். இந்த நிகழ்ச்சி சிலருக்கு இலக்கு, சிலருக்கு ஏணி. சிலருக்கு இது மலை அடிவாரம், சிலருக்கு இது உச்சி.
இந்த சீசனில் யார் மலையேற போறாங்க, யார் மலையேறி உச்சியில் கொடி நாட்டப் போறங்கன்னு பார்க்கலாம்” என்று நிகழ்ச்சியை ஆரம்பித்து வீட்டிற்குள் சென்றார்.
எகிப்திய அரண்மை, இரண்டு வீடு – ஒரு வீடு சாதாரணமான வீடு, இன்னொன்று பிரமாண்டமான சூப்பர் டீலக்ஸ் வசதி கொண்ட வீடு, இரண்டு வீட்டிலும் கேப்டனுக்குத் தனி அறை. சிறை, ஒரு வீட்டுக்கு 12 பேர். வீடெங்கும் எகிப்திய சிலைகள், பலவகை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகங்கள் என பிரமாண்டமாக ஆரம்பமாகியிருக்கிறது இந்த பிக் பாஸ் சீசன் 9. ‘பிக் பாஸ் வீடு ஆட்டத்திற்கு ரெடி’ என கொடி அசைத்து ஆட்டத்தைத் தொடங்கினார் விஜே.