
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் இன்று மாலை 6மணிக்கு ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது.
எகிப்திய அரண்மை, இரண்டு வீடு – ஒரு வீடு சாதாரணமான வீடு, இன்னொன்று பிரமாண்டமான சூப்பர் டீலக்ஸ் வசதி கொண்ட வீடு, இரண்டு வீட்டிலும் கேப்டனுக்குத் தனி அறை. சிறை, ஒரு வீட்டுக்கு 12 பேர். வீடெங்கும் எகிப்திய சிலைகள், பலவகை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகங்கள் என பிரமாண்டமாக ஆரம்பமாகியிருக்கிறது இந்த பிக்பாஸ் சீசன் 9. ‘பிக்பாஸ் வீடு ஆட்டத்திற்கு ரெடி’ என கொடி அசைத்து ஆட்டத்தைத் தொடங்கினார் விஜய் சேதுபதி.
முதலாவதாக என்ட்ரி கொடுத்த போட்டியாளர் திவாகர். அவரை பார்த்ததும் கூட்டத்திலிருந்து ‘நடிப்பு அரக்கன், நடிப்பு அரக்கன்’ என்று நக்கலாக ஆரவாரம் வந்தது. இதைக்கேட்டவுடன் விஜய் சேதுபது, “நீங்கள் எல்லாரும் அவரை, யூடியூப்பில் பார்த்திட்டு இப்படி சொல்றீங்க. ஆனால், இங்க பிக்பாஸ் வீட்டுல அவரை அப்படி காட்டமாட்டோம், இங்க அவரோட உண்மையாக முகத்தைப் பார்ப்பீங்க.
பிக் பாஸ் உள்ள தெரிஞ்சவங்களா பார்த்து செலக்ட் பண்றாங்கனு சொல்றாங்க, திவாகர் இங்க வருவதற்கு பிக் பாஸ் டீம் நிறைய கேள்விகள் கேட்டாங்க, அதுகெல்லாம் சிறப்பாக பதில் சொல்லியிருக்கிறார் டாக்டர் திவாகர்” என்று பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி