• October 5, 2025
  • NewsEditor
  • 0

காந்தாரா தி லெஜண்ட் சாப்டர் 1 திரைப்படம் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. கன்னட திரையுலகைக் கடந்து தமிழ் மற்றும் இந்தியிலும் வெற்றிநடை போடுகிறது.

காந்தாரா என்ற பகுதியில் வசிக்கும் பழங்குடியினரின் புராணக்கதையைக் கூறுவதாக எடுக்கப்பட்ட கதைக் களமும், கடவுள்களின் ஃபேண்டசியான கேமியோவும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

Ajaneesh Loknath

இயக்குநராகவும் நடிகராகவும் ரிஷப் ஷெட்டி கலக்கியிருந்ததுடன் ருக்மினி, குல்ஷன் தேவையா, ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்களும் பாராட்டப்பட்டு வருகின்றனர். காந்தாரா படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியிருக்க, திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு பின்னணி இசைக்காக கொண்டாடப்படுகிறார் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.

Kantara இசையமைப்பாளருக்கு சந்தோஷ் நாராயணன் பாராட்டு

நாடுமுழுவதுமிருந்து திரையுலகினர், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் அஜனீஷுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சந்தோஷ் நாராயணன், “காந்தாரா சாப்டர் நாட்டுப்புற கதைகள், புரட்சி மற்றும் ஆன்மீகத்தின் மயக்க வைக்கும் கலவையாக இருந்தது. ரிஷப் ஷெட்டியும் காந்தாரா படக்குழுவும் நம்மை பெருமைபடுத்தியிருக்கின்றனர். அருமையான துணிச்சலான இசையைக் கொடுத்துள்ள அஜ்னீஷின் வெற்றி மிகவும் பர்சனலாக இருந்தது.” என ட்வீட் செய்திருந்தார்.

ரவி பஸ்ரூர் வாழ்த்து

கே.ஜி.எஃப், சலார் படங்களின் இசையமைப்பாளரான ரவி பஸ்ரூர், “காந்தாரா சாப்டர் 1 ஒரு சினிமாடிக் மாஸ்டர்பீஸ். ரிஷப் ஷெட்டியின் இயக்கமும் நடிப்பும் அற்புதம். ஆழமாக வேரூன்றிய உலகளவில் சக்திவாய்ந்த ஒரு கதையைக் கொடுத்துள்ளீர்கள். அஜ்னீஷின் இசைதான் இந்த படத்தின் ஆன்மா. எல்லா இடத்திலும் கூஸ்பம்ஸாக இருந்தது” எனப் பாராட்டியிருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *