
ரஜினியை மனதில் வைத்து எழுதிய கதை தான் ‘ட்யூட்’ என்று இயக்குநர் கீர்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்யூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதுவரை 3 பாடல்களை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தினை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கி இருக்கிறார். இவர் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.