• October 5, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்காவைச் சேர்ந்த சில தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் போக மீதி இருக்கும் பாலை ஆன்லைனில் தளங்களில் விற்று டாலர்களில் சம்பாதித்து வருகின்றனர்.

தாய்ப்பால் விற்பனை செய்து ஒரே நாளில் 800 டாலர் வரை சம்பாதிப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சமூக வலைத்தளங்களில் கூறியிருக்கிறார்.

மீதம் இருக்கும் தாய்ப்பாலை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றும் முயற்சி அமெரிக்காவில் நடந்து வருவதற்கு மத்தியில் இந்த வினோத வியாபாரத்தில் குழந்தைகளுக்காக வாங்கும் பெற்றோர்களை விட பாடி பில்டர்கள் இந்த தாய்ப்பாலை வாங்கும் ட்ரெண்ட் உருவாகி வருகிறது.

பேஸ்புக் போன்ற ஆன்லைனில் கிடைக்கும் தாய்ப்பாலை பல டாலர்கள் கொடுத்து பாடி பில்டர்கள் வாங்கி பருகுகின்றனர்.

Breast milk representative image

பாடி பில்டர்கள் ஏன் தாய்ப்பால் வாங்குகின்றனர்?

தாய்ப்பாலில் அதிக கலோரிகள், ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபயாட்டிக் இருப்பதால் பாடி பில்டர்கள் இதனை ஒரு சூப்பர் ஃபுட் என்று கருதி இதனை வாங்குகின்றனர். ஆனால் பெரியவர்கள் தாய்ப்பால் குடிப்பதால் உடல் நலத்திற்கு எந்த விதமான நிரூபிக்கப்பட்ட பலன்களும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமன்றி இவ்வாறு ஆன்லைனில் விற்கப்படும் தாய்ப்பாலை பருகுவதால், பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால் கூட அது பரவுவதற்கு வாய்ப்பு இருக்கும் என்ற எச்சரிக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *