• October 5, 2025
  • NewsEditor
  • 0

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 120 சட்டமன்ற தொகுதிகளைக் கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக, ஒவ்வொரு தொகுதிக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். குறிப்பாக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்னைகளையும், தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாததை பட்டியலிட்டும் பேசி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 18.09.2025, 19.09.2025 மற்றும் 20.09.2025 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. சில காரணங்களினால் சுற்றுப்பயணம் தேதி 19.09.2025, 20.09.2025 மற்றும் 21.09.2025 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 19.09.2025 அன்று நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளதால், 20.09.2025 அன்று நடைபெற இருந்த நாமக்கல், பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி பிரசாரம் மற்றும் 21.09.2025 அன்று நடைபெற இருந்த திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளுக்கான பிரச்சார பயணம், 04.10.2025 அன்று நாமக்கல், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதிகளிலும், 05.10.2025 அன்று திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிகளிலும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின், நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணம் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. காவல்துறையினர் அனுமதி கொடுக்காததால் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 04.10.2025 மற்றும் 05.10.2025ம் தேதி நடக்கவிருந்த சுற்றுப்பயணம், 08.10.2025 மற்றும் 09.10.2025ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *