
தஞ்சாவூர்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கரூர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்புடனும், நிதானமாகவும் செயல்பட்டு வருகிறார். யாரையும் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கம் முதல்வருக்கு இல்லை என்று தெரிகிறது. 41 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கைது செய்ய வேண்டிய அவசியமும் அரசுக்கு உள்ளது. ஆனால், விஜய் கைது செய்யப்படவில்லை.